ரூ.398-க்கு ரீசார்ஜ்... ரூ.3,300 கேஷ்பேக்: அசத்தல் சலுகையின் விவரம் உள்ளே...

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:16 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கியது. தற்போது இதனை காப்பி அடித்து ஐடியா மேஜிக் கேஷ்பேக் சேவையை வழங்கியுள்ளது. ஆனால், இதில் வாடிக்கையாளர்களுக்கான லாபம் அதிகமா உள்ளது. 
 
ஐடியா தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. ரூ.398 அல்லது அதற்கும் மேலான தொகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகை வழங்கப்படும். 
 
ஐடியா மேஜிக் கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் வாடிக்கையாளர்களுக்கு வவுச்சர்கள், வாலெட் கேஷ்பேக் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள் வழங்கப்படும்.
 
ரூ.398 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 மதிப்புடைய எட்டு வவுச்சர்கள், ரூ.2700 மதிப்புடைய ஐந்து ஷாப்பிங் வவுச்சர்கள், மைஐடியா அல்லது ஐடியா வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.200 மதிப்புடைய கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐடியாவின் மேஜிக் கேஷ்பேக் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்