காலாவதியான டூ வீலர் பாலிசியை புதுப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே...

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:00 IST)
டூ வீலர்களுக்கு காப்பீடு பெறுவது இந்திய சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் காலாவதியான இரு சக்கர வாகன காப்பீடுகளை புதுப்பிப்பது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
டூ வீலர் பாலிசியின் பிரீமியம் செலுத்தாதபோது, பாலிசி காலம் கழிந்துவிடுகிறது, அதன் விளைவாக, அனைத்து உரிமைகளும் நன்மையும் குறைந்துவிடும். அவ்வாறு காலாவதியான பாலிசியை எளிமையாக புதுப்பிக்கலாம். 
 
டூ வீலர் பாலிசி 90 நாட்களுக்கு மேலாக லாப்ஸ் ஆனால் உங்கள் பாலிசி பறிமுதல் செய்யப்படும். அடுத்த சுழற்சியில் அதிக பிரீமியத்துடன் முடிவடையும். 
ஆன்லைன் முறை:
1. பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்க உங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் லாகின் செய்து தேவையான விவரங்களை பதிவிடவும். 
2. அடுத்து வாகன பதிவு எண், பாலிசி விவரங்கள் மற்றும்  தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் இணைப்பு பற்றிய தகவல்களையும் பதிவு செய்யவும். 
3. இவை அனைத்தையும் செய்து முடித்ததும், பாலிசி புதுப்பிக்கப்படும். மின்னஞ்சல் மூலம் ஆவணங்கள் அனுப்பப்படும். 
ஆஃப்லைன் முறை:
1. பாலிசியை ஆஃப்லைனில் நீங்கள் காப்பீட்டாளரிடம் செல்ல வேண்டும். 
2. விண்ணப்பதாரர் பாலிசி ஆவணங்களை தயாரிக்க வேண்டும்.
3. இதற்கு தொடர்புடைய ஆவணங்களை கோரினால், பாலிசி மற்றும் என்சிபி வழங்கப்படும்.
 
குறிப்பு: 3 வருட காலத்திற்கு டூ வீலர் நீண்ட கால காப்பீட்டை தேர்வு செய்தால், பிரீமியத்தின், வருடாந்திர உயர்வை தவிர்க்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்