கடன் வழங்கும் கூகுள் பே: முன்னணி வங்கிகளுடன் கூட்டு!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (14:33 IST)
தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் பேமெண்ட் ஆகியவை முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. பேடிஎம் துவங்கி பேஸ்புக், வாட்ஸ் ஆப் வரை அனைத்து செயலிகளும் டிஜிட்டல் பேமெண்டை ஊக்குவிக்கின்றன. 
 
அந்த வகையில் தற்போது கூகுள் டிஜிட்டல் பேமென்ட் துறையிலும் தனது சந்தை மதிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் நிதி சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, கூகுள் டெஸ் என்ற செயலி சில அடிப்படை நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வந்தது. தற்போது கூகுள் டெஸ் கூகுள் பே என்று மாறி பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி கடனையும் வழங்கவுள்ளது. 
 
கூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும் சில ஆவணங்களை மட்டும் வழங்கி வங்கியின் ஒப்புதல் பெற்றுவிட்டால், அடுத்த சில மணி நேரங்களில் கடன் தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என கூறுகிறது கூகுள் பே ஆப்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்