கூகுள் தேடுதளத்தில் இடியட்ன்னு தேடி பாருக்களேன்...

சனி, 21 ஜூலை 2018 (15:35 IST)
கூகுள் தேடுதளத்தில் ஆங்கிலத்தில் இடியட் என டைப் செய்தால் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படங்களை காட்டுகிறது. இதற்கு முன்னர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் கூட இதுபோன்று நடந்துள்ளது. 
 
இந்தியில் பிகு என்று பதிவிட்டு தேடினால், பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது. பிகு என்பது பொய்காரர் என்று பொருள். அதேபோல, இந்தியில் பப்பு என்று பதிவிட்டபோது ராகுல் காந்தியின் புகைப்படம் வந்தது. 
 
இப்போது ஆங்கிலத்தில் இடியட் என்ற பதிவிட்டு தேடினால், டிரம்ப்பின் புகைப்படம் வருகிறது. கூகுள் அல்காரிதத்தில் அதிகமாக தேடப்படும் புகைப்படம் முதலில் வரும் என்பதால், டிரம்ப்பின் புகைப்படம் வந்துள்ளது. 

இதன் காரணமாக யார் இடியட் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் அதற்கு டிரம்ப் புகைப்படம் தோன்றுகிறது. எனவே இடியட் என்ற வார்த்தை அனைவராலும் கூகுள் தேடுதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்