ஆஃப்லைன் சேல்: பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (14:39 IST)
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஆஃப்லைன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கூல்பேட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன். 
கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்திர பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் விற்பனை துவங்குகிறது. 
 
கூல்பேட் மெகா 5ஏ சிறப்பம்சங்கள்:
 
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
#1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர்
# மாலி 400 GPU, 2 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா,5 எம்பி செல்ஃபி கேமரா
# 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் கோல்ட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்