சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் சலுகைகள் வழங்கியுள்ளது.
இந்த விற்பனையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. முன்னணி ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன் லேப்டாப் மற்றும் பல்வேறு மின்சாதனங்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.
மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% தள்ளுபடி அல்லது 10% கேஷ்பேக் வழங்கப்படும். ஹெச்டி டிவி மாடல்கள் ரூ.10,990 முதல், வாஷிங் மெஷின்களின் ரூ.10,490 முதல், குளிர்சாதன பெட்டிகள் ரூ.11,490 முதல் கிடைக்கின்றன.