பிஎஸ்என்எல் இரண்டு புதிய காம்போ பிளான் அறிமுகம்!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (10:15 IST)
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய காம்போ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 


 
 
# ரூ.786 மற்றும் ரூ.599 என இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
# ரூ.786 பேக் பயனர்களுக்கு 90 நாட்களுக்கு ரூ.786 என்ற பேலன்ஸ் மற்றும் 3ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது. 
 
# ரூ.786 பேலன்ஸ் அழைப்புகளுக்கு மட்டுமே, எஸ்எம்எஸ் பயன்பாட்டிற்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 
# ரூ.599 திட்டத்தில் 507 மெயின் பேலன்ஸ் மற்றும் கூடுதலாக ரூ.279-க்கு பிரத்யேகமாக குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. 
 
# மேலும், ரூ.310, ரூ.510, ரூ.610 முதல் ரூ.2,010 வரை ஆகிய ரீசார்ஜ் மதிப்புகளுக்கு 10 சதவீதம் கூடுதல் நன்மை அளிக்கப்படுகிறது.
 
# ரூ.3,100 மற்றும் ரூ.5,100 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 20% கூடுதல் மதிப்பு வழங்கப்படும்.
 
அடுத்த கட்டுரையில்