அதள பாதாளத்தில் ஆட்டோமொபைல்: அதிர்ச்சி தரும் ஆகஸ்ட் ரிப்போர்ட்!!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:23 IST)
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எந்த அளவு வீழ்ச்சியை சந்தித்து உள்ளது என்ற டேட்டாவை இந்திய வாகன உற்பத்தி சங்கம் வெளியிட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆட்டோமொபைல் துறையின் நிலைமை மோசமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு விற்பனையுடன் இந்த ஆண்டு விற்பனை ஒப்பிடப்பட்டு டேட்டா ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டேட்டா தரும் புள்ளி விவரம் பின்வருமாறு,
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த வாகன விற்பனை விட இந்த ஆண்டு 31.57% விற்பனை குறைந்துள்ளது. அதாவது, 2018 ஆம் ஆண்டு 2.87 லட்சம் வாகனம் விற்கப்பட்டது. இந்த ஆண்டு 1.96 லட்ச வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. 
 
கார் விற்பனையை பொருத்த வரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41% சரிந்துள்ளது. அதோடு தொழில் வர்த்தகம் சார்த்த வாகனங்களின் விற்பனையும் 38.71% குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்