முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது அமேசான் மூலம் பொருட்களை விற்கவும் செய்யலாம்.
இபே, குவிக்கர், ஒ.எல்.எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் மிகப்பெரிய போட்டியாளராக மாறியுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் தற்போதைய குறிப்புகளின்படி விற்க வேண்டிய பொருட்களின் விபரம் மற்றும் விலையை மட்டும் தெரிவித்தால், அமேசான் நிறுவனமே நேரடியாக வந்து பேக்கிங் மற்றும் டெலிவரியை பார்த்து கொள்ளும்.
பொருட்களை விற்க விரும்புபவர்களின் பொருள் ரூ.1000 வரை இருந்தால் விற்பனை செய்பவர்களிடம் ரூ.10, ரூ.1000 முதல் ரூ.5000 வரை இருந்தால் ரூ.50, ரூ.5000க்கு மேல் இருந்தால் ரூ.100ம் கட்டணமாக பெற்று கொள்கிறது.
பெங்களூரில், இந்த சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவையை அமேசான் நிறுவனம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.