போக்கிரிதனமான ஏர்டெல் ஆஃபர்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (12:27 IST)
ஏர்டெல் நிறுவனம் பல முக்கிய ஆஃபர் திட்டங்களுக்கான வேலிடிட்டியை குறைக்கத் தொடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர்.


 
 
ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக அளவிலான ஆஃபர்களை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ஏர்டெல் நிறுவனமோ அதன் ஆஃபரின் வேலிட்டியை குறைத்துள்ளது. அதில் சில...
 
600எம்பி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.149/- ரீசார்ஜ் திட்டம், தற்போது வெறும் 16 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று, ஆர்சி 149 எனினும், இந்த திட்டமும் இனி 16 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். 
 
புதிய சலுகை அறிவிப்பை வெளியிடும் ஜியோ சேவைக்கு எதிராக, இதுபோன்ற வேலிடிட்டி குறைப்புகள் நிகழ்த்துவதில் ஏர்டெல் ஈடுபட்டால் தொடர்ந்து முதல் இடம் வகிக்குமா என்பது கேள்விகுறியாய் உள்ளது.
அடுத்த கட்டுரையில்