ஏர்டெல்லின் டகால்டி ஆஃபர்: ரேட் ஓகே, டேட்டா...?

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (15:35 IST)
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஆஃபர் வழங்குவதாக நினைத்துக்கொண்டு ஜியோ வழங்கும் ஆஃபர்களை காப்பி அடித்து சலுகைகளை அறிவித்து வருகிறது. 
 
அதன்படி, தற்போது தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஏர்டெல் அறிவித்துள்ள இச்சலுகையில் 365 நாட்கள் அதவது வருடந்திர வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. 
 
ரூ, ரூ.1,699 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதோடு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
இதை தவிர ஏர்டெல் டிவி செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் சேவையும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 
 
ஜியோவுக்கு போட்டியாக இந்த சலுகையை ஏர்டெல் வழங்குகிறது என கூறினாலும், இது டலாக்டி சலுகையாகவே தெரிகிறது. ஏனெனில் ஜியோ வழங்கும் வருடாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்