வீடு தேடி வரும் ஏர்டெல் ஆஃபர்...

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (19:56 IST)
ஏர்டெல் நிறுவனம் மேலும் புதிய அதிரடி சலுகையை அளித்துள்ளது. மேலும் ஆஃபர்கள் நமது வீடு தேடி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


 

ஏர்டெல் நிறுவனம் ரூ.499 முதல் ரூ.1199 வரை இலவச அழைப்புகளுடன் பல்வேறு போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
 
ஆறு மாதங்களுக்கு 60 ஜிபி டேட்டா, இலவச லைவ் டிவி சலுகை போன்ற திட்டதை சமீபத்தில் அறிமுகம் செய்தது. 
 
அதோடு ரூ.299-க்கு மூன்று மாதங்களுக்கு 30 ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கும் போஸ்ட்பெய்டு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. 

தற்போது இதில் ஒரு திருப்பமாக மேல் கொடுக்கப்பட்ட எந்த சலுகையை புதிய வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் ஆஃபருடன் சிம் கார்டு வீடுதேடி வரும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த சலுகையை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். 3 மாதங்களுக்கு மேல் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகை கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்