விரைவில் ஜீயோ ஜிகாஃபைபர்: 600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே!!!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (14:29 IST)
ரிலையன்ஸ் ஜியோ, டிசம்பர் 31 ஆம் தேதி வரை வரம்பற்ற இணைய வசதி, வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த அதிரடியில் ஜியோ இறங்கிவிட்டது. 

 
ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்:
 
ஜியோ ஜிகாஃபைபர் திட்டமானது விரைவில் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 ஜிபி (1Gbps) வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
 
600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே:
 
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் திட்டத்தின் கீழ் ரூ.500/- செலுத்தி 600 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். மேலும் ரூ.500 செலுத்தி நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.
 
ரூ.400க்கு அன்-லிமிட்டெட் டேட்டா: 
 
ரூ.400 செலுத்தினால் 24 மணி நேரத்திற்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது. 
 
ரூ.5,500, ரூ.4000, ரூ.3,500, ரூ.2,000 மற்றும் ரூ.1,500 டேட்டா திட்டங்கள்:
 
ரூ.5500-க்கு 300 ஜிபி டேட்டா நொடிக்கு 600 எம்பி என்ற வேகத்தில், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது.
 
ரூ.4000 செலுத்தும் போது நொடிக்கு 400 எம்பி வேகத்தில் 500 ஜிபி இண்டர்நெட் சுமார் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது. 
 
ரூ.3,500 செலுத்தினால், நொடிக்கு 200 எம்பி வேகத்தில் 750 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றது. 
 
ரூ.2,000-த்திற்கு நொடிக்கு 100 எம்பி வேகத்தில் சுமார் 1000 ஜிபி இண்டர்நெட், 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.
 
ரூ.1,500 செலுத்தினால் நொடிக்கு 50 எம்பி என்ற வேகத்தில் 2000 ஜிபி டேட்டா சுமார் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.
 
விநியோகம் மற்றும் இண்டர்நெட் வேகம்:
 
இந்தியா முழுக்க சுமார் 100 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை வழங்கப்பட இருப்பதாகவும், இதனை ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிகிறது. ஜியோ ஃபைபர் ரௌவுட்டர் வாடிக்கையாளர்கள் ரூ.6000 செலுத்தியும் வாங்க முடியும்.
 
பிராட்பேன்ட் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்கள் நொடிக்கு 800 எம்பி என்றளவு வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெற முடியும். வெளியீட்டிற்குப் பின்னர் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இணையச் சேவை வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்