காவடி பிரியன் கந்தனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!!

Webdunia
கிருத்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

 
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில்  கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
 
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி  உலா என விமரிசையாக நடக்கிறது.
 
காவடி பிரியன் கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, செடில்  காவடி, சேவல் காவடி,  தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்  கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
 
சிவபெருமானின் நெரற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக்  குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று  முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
 
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகையில்  கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல  செளபாக்கியங்களும் சேரும்.
அடுத்த கட்டுரையில்