பொதுவாக பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர். இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஏறிந்து விளையாடுகின்றனர்.
இந்த வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாகப் விற்று வருகின்றனர்.