எல்லையில் பரபரப்பு: இந்திய - பாகிஸ்தான் தாக்குதல்...

திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:31 IST)
பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 
 
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பீம்பார் காலி செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 
 
இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும், ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுமார் 84 பள்ளிகளுக்கு அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர், எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டதால், 15 நாட்கள் வரை பள்ளிகலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்