150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்.. 15000 காலியிடங்கள்... சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (12:02 IST)
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தபடுவது வழக்கம்.

இந்த முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்தின் காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும். இதனால் ஏராளமான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

தற்போது சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு நாளை (அக்டோபர் 28) நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் மேற்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள்தாகவும், 15000 மேற்பட்ட நிரப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்