மருத்துவகுணம் மிக்க மஞ்சள் என்னென்ன வியாதிகளை குணப்படுத்தும் தெரியுமா...?

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (18:46 IST)
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.


மஞ்சளுக்கு ஒருவிதமான வாசனை உண்டு. பலவகையான சமையல் பதார்த்தங்களுடன் மஞ்சளைச் சேர்ப்பது நம் நாட்டுப் பழக்கம். நாம் உண்ணும் பதார்த்தங்களுடன் விஷக்கிருமிகளும் கலந்திருக்கும். இந்த விஷக்கிருமிகளை அழிப்பதற்காகத்தான் மஞ்சளை பதார்த்தத்துடன் சேர்க்கின்றனர்.

ஜலதோஷம், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சளைச் சுட்டு அதில் வரும் புகையை நுகர்ந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சளை அரைத்து, இரவில் கை, கால், முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு கை, கால், முகத்தில் முடி வளர்வது நின்று விடும்.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.

மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.

குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து சிறிது நேரம் கழித்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம், அரிப்பு போன்றவை ஏற்படாது.

தினமும் குளிப்பதற்கு முன் சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்து அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் ஒரு பேக் போல் போட்டு  அரை மணிநேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகம் பளிச்சிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்