பல வியாதிகளுக்கும் எளிதான முறையில் தீர்வு தரும் எலுமிச்சை !!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:54 IST)
எலுமிச்சை பெரும்பாலும் எல்லோருடைய வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கப்படுகிறது. எலுமிச்சையில் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை, காட்டு எலுமிச்சை எனப் பலவகைகள் உண்டு. இதில் காட்டு எலுமிச்சை அதிக மருத்துவ குணங்கள் நிரம்பியது.


எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கி உடல் நறுமணத்துடன் புத்துணர்வு பெறும். எலுமிச்சை பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை குணமாக்கும்.

சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து பின்பு உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல், மயக்கம் போன்றவை தீரும்.

ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, பிழிந்து சாறக்கி கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து பின்பு உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல், மயக்கம் போன்றவை தீரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்