உணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (07:14 IST)
தற்கால அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவசர அவசரமாகவோ, அல்லது கையேந்தி பவனில் நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். உணவு உட்கொள்வது என்பது ஒரு கலை என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அதே சமயம் சாப்பிடும்போது ஒருசில நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். இது நம்முடன் சாப்பிடும் பிற நபர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து தற்போது பார்ப்போம்



 


1. உணவை சாப்பிடும்போது மெதுவாக அவசரம் இல்லாமல் சாப்பிட வேண்டும். அதேபோல் உணவை மென்று சாப்பிடும்போது வாயை மூடிக்கொண்டு மென்று சாப்பிட வேண்டும். வாயை திறந்தபடியே சாப்பிட கூடாது.

2. உணவை கையிலோ அல்லது கரண்டியிலோ எடுக்கும்போது சரியான அளவில் எடுக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது நாகரிகத்தின் முதல் படி

3.  மேஜையில் உள்ள கரண்டி போன்ற உணவு எடுத்துச்சாப்பிடும் உபகரணங்களை ஒரு முறை கையில் எடுத்து பயன்படுத்திவிட்டால் அதை மீண்டும் மேஜையில் வைக்கக் கூடாது. உணவு தட்டு அல்லது அருகில் உள்ள தட்டில் தான் வைக்க வேண்டும்.

4. சாப்பிடும்போது நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டும். உடலை வளைத்து முதுகு குனிந்து சாப்பிட்டால் சரியாக ஜீரணம் ஆகாது

5. சாப்பிடும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது உணவுபொருட்களை வீணடிக்க கூடாது. உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு உணவை எடுத்து தட்டில் வைத்து கொள்ள வேண்டும்

 
அடுத்த கட்டுரையில்