நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பானங்கள் !!

Webdunia
கொரோனா அதிகளவு பரவிவரும் இந்த நிலையை சமாளிக்க, நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது. அவசியமாகும். அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் சைவ, அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

எலுமிச்சை சாறை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பாலுடன்  கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
 
பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றை, நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றிலும் மூன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதுவும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும்.
 
சீதா பழம், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை சாறு பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்தும். சிலருக்கு இவை சளியை ஏற்படுத்தும் என்றால்,  அவர்கள் தவிர்க்கலாம்.
 
ஒரு கைப்பிடி தூதுவளை, ஒரு கைப்பிடி துளசி, ஒரு வெற்றிலையுடன், ஒரு துண்டு சுக்கு, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் தனியா, திப்பிலி அரை டீஸ்பூன்,  புதினா சிறிதளவு, கற்பூரவள்ளி இலை 4, சிறிதளவு மஞ்சள் தூள் இவை அனைத்தையும் 2 லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி  வெளியேறுவதோடு, நுரையீரல் பலப்படும்.
 
குப்பைமேனி இலைகளை எடுத்து அலசி, அதோடு சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். இதை மூன்று நாள்களுக்கு காலையில் வெறும் கால்  டம்ளர் வீதம் வெறும் வயிற்றில் குடித்துவரவும். இதைக் குடித்த பின்னர் நிச்சயம் வாந்தி வரும் பயப்பட வேண்டாம். இதனால் சளி எல்லாம் வாந்தி மூலமாக  வெளியேறும்.
 
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
 
சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் இவற்றை சம அளவில் எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து குடிப்பது, உடலின் நோய் எதிர்ப்புத் திறனை  அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்