அனைவராலும் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளி பண்டிகை...!

Webdunia
தீபாவளிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவர்கள் கேதாரகௌரி விரதம் அனுஷ்டித்து  தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
புனிதத் தலமான கேதார்நாத்தில் சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம்  கூறுகிறது. அதன் இறுதியில் சிவன் சக்திக்கு காட்சியளித்து தன்னில் ஒருபாதியாக சக்தியை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறினார் என்பது  புராணம் கூறும் கதை. அந்த நன்னாள் தான் தீபாவளித் திருநாள்.
 
இதையொட்டி, புரட்டாசி மாதம் தசமி வளர்பிறை திதியில் துவங்கி ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி வரை 21 நாள்கள் விரதம் இருந்து  சிவனை வழிபட மணவாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. இதுவே கேதாரகௌரி விரதமாகும்.
 
வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பிய நாள் என்பதாலும், நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த நாள் என்பதாலும் வைணவர்களுக்கு இந்நாள் முக்கியமான பண்டிகை நாளாகிறது. மாலவனிடம் நரகாசுரன் கேட்ட வரத்திற்காகவே தீபாவளி நன்னாளில் எண்ணெய்க் குளியலுடன்  வழிபடுவது பொதுவான பண்பாட்டுப் பழக்கமாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது.
 
பாண்டவர்கள் பன்னிரு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து நாடு திரும்பிய நாளும் தீபாவளி நாளே. இதுதவிர, தீபாவளியை பலநாள் திருவிழாவாகக் கொண்டாடுவது வடமாநிலங்களில் விசேஷமாக உள்ளது.
 
கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என  தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகையாக பல மாநிலங்களில் பலவிதங்களில் தொடர்ந்து கொண்டாடுவது இப்பண்டிகையின்  சிறப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்