ரமதா பிளாசாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பழக்கலவை விழா

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (17:55 IST)
சென்னையில் புகழ்பெற்ற 5-நட்சத்திர ஹோட்டலான  ரமதா பிளாசாவில் பழக்கலவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



சென்னையில் உள்ள கிண்டியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5-நட்சத்திர ஹோட்டல் ரமதா பிளாசா சென்னை. அதன் விதிவிலக்காக அற்புதமான உபசரிப்பு ஆடம்பரமான அலங்கரிகபட்ட உட்புறகட்டமைப்பு சிறந்த பான்-ஆசிய உணவகம் - தி ஸ்காலியன் மற்றும் உலகதரம் வாய்ந்த கஃபெ - காபி பிளேஸ் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டது. எல்லாவிதமான கொண்டாட்டங்களுக்கும் நகரில் முக்கிய இடமாக அமையபெற்றுள்ளது.

கேக்கிற்கான பழகலவை விழா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ரமதா பிளாசா சென்னை பொது மேலாளர் சந்தீப் பட்நாகர் மற்றும் காபி பிளேஸின் முக்கிய செஃப்கள் மற்றும் நகரத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் கொண்டாடப்பட்டது.கேக் கலவை விழா 17 ஆம் நூற்றாண்டில் உருவானதாக நம்பப்படுகிறது. அறுவடை பருவத்தின் வருகையைக் குறிக்கும் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் பழங்கள் மற்றும் உலர்ந்த கனிகள் அறுவடை செய்யப்பட்டு பாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக் தயாரிக்கபடுகிறது. கலவையின் ஒரு பகுதி அடுத்த அறுவடை பருவத்திற்காக சேமித்து வைக்கப்பட்டது. இக்கலவைஇ ஏராளமான அறுவடைகளையும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.



விழாவில் பங்குபெற்ற விருந்தினர்களுக்கு செஃப் தொப்பிகள்இ எப்பிரன்ஸ் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை வழங்கப்பட்டது. அவர்கள் ஒன்றாக இணைந்து அனைத்து பொருட்களையும் கலப்பதை நேசித்தார்கள். ரமதா பிளாசா சென்னை கேக் பழக்கலவை விழாவை கண் கவரும் விதத்தில் கொண்டாடினார்கள். இது கிறிஸ்துமஸ் பருவத்தின் மகிழ்ச்சியான விழாக்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்