இரட்டை மரணம் தொடர்பாக பிரபல பாடகியின் வீடியோவை நம்ப வேண்டாம் - சிபிசிஐடி

வெள்ளி, 10 ஜூலை 2020 (17:01 IST)
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகையே உலுக்கியது போன்று, தூத்துக்குடி மாவட்டம் சாத்தாகுளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்ன்கிஸ் ஆகிய இருவரும்ன் போலீஸாரால் தாக்கப்பட்டு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தானாக வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. இதுவரை இரட்டை மரணம் வழக்கில் எஸ்.ஐ உள்ளிட்ட 10 போலீஸார் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனெவே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் சாத்தான் இரட்டை மரண வழக்கை  இன்று முதல் சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரது மரணம் தொடர்பாக `இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் கருத்துகள் தெரிவித்தனர். குறிப்பாக சினிமாத்துறையினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாடகி சுசித்ரா ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளா சிபிசிஐடி போலீஸார் பாடகி சுசித்ரா என்பவரால் சமீபத்தில் சாத்தான்குளம் இரட்ட மரணம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோ முற்றிலும் உண்கைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்