வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
சனி, 12 அக்டோபர் 2024 (12:58 IST)

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே மிதமான மழை பெய்து வரும் நிலையில் இம்மாத இடையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தற்போது தெற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி வலுவடைந்து வருவதாகவும் வரும் 14ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்