”ஓரணியாக செயல்பட தவறிவிட்டோம்”… வேதனையில் ரோஹித் ஷர்மா

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (11:26 IST)
நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஓரணியாக செயல்பட தவறியதால், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தன்னுடைய மனம் கணக்கிறது என தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி படுதோல்வியை சந்தித்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. அந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டம் இழந்தார்.

இது தொடர்பாக ரோஹித் ஷர்மா தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அதாவது இந்திய அணியின் வீரர்கள், ஒழுங்காக ஆடாததால், தனது மனம் கணத்துள்ளதாகவும், இதனால் பெரும் வருத்தத்தில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் கேப்டன் கோலியும், மோசமாக விளையாட, 45 நிமிடங்களில் ஆட்டமிழந்தார் எனவும், இந்திய அணியின் வீரர்கள் ஓரணியாக செயல்படாமல் போனதால் தான், பெரும் தோல்வியைத் தழுவியது என்றும் கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்து உலக சாதனை படைத்த ரோஹித் ஷர்மா, அரையிறுதியில் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. எனினும் ரோஹித் ஷர்மா, உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 648 ரன்கள் குவித்த வீரர் என்ற சிறப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தகது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்