அம்பயர் செய்தது மிகப்பெரிய தவறு: சர்ச்சையாகும் இங்கிலாந்து வெற்றி

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (07:45 IST)
இங்கிலாந்து அணியின் வெற்றி நியாயமானது அல்ல என முன்னாள் ஐசிசி அம்பயர் சைமன் டாஃபல் என்பவர் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் 241 என்ற சம அளவில் ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 என்ற ஒரே ரன்கள் எடுத்ததால் அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது 49 ஆவது ஓவரில் இரண்டாவது ரன்னுக்காக ஓடிய பென் ஸ்டோக்ஸ் பேட்டை கிரீஸுக்கு அருகில் வைக்க முயன்றபோது அவரது பேட்டில் பந்துபட்டு பவுண்டரி லைனுக்கு என்றது.  இதனை அடுத்து அம்பயர் 6 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு கொடுத்தார். அதாவது பேட்ஸ்மேன்கள் ஓடிய இரண்டு ரன்களும் ஓவர் த்ரோவிற்காக 4 ரன்களும் கொடுத்தார் 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஐசிசி அம்பயர் சைமன் டாஃபல் அந்த போட்டியில் பணியாற்றிய அம்பயர் ஆறு ரன்கள் கொடுத்தது விதிமுறைகளுக்கு முரணானது என்றும்,  அந்த போட்டியில் பணிபுரிந்த அம்பயர் தவறு செய்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் 
 
இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றி நியாயமான வெற்றி அல்ல என்றும், உண்மையாகவே நியூசிலாந்து அணி தான் வெற்றி தகுதியான அணி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்