Worldcup T20: புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? இன்று India vs USA மோதல்!

Prasanth Karthick

புதன், 12 ஜூன் 2024 (18:11 IST)

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று அமெரிக்கா அணியும், இந்தியா அணியும் மோதிக் கொள்கின்றன.

 

உலகக்கோப்பை டி20 போட்டியில் 20 நாட்டு அணிகள் பரபரப்பாக மோதி வருகின்றன. இதில் 4 பிரிவுகளில் அணிகள் மோதி வரும் நிலையில் அணி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் போட்டியிட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 போட்டிகளிலுமே வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அணியும் இதுவரை போட்டியிட்ட 2 போட்டிகளிலும் வென்று புள்ளி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே பாகிஸ்தானை அடித்து வீழ்த்தியுள்ளன.

இந்நிலையில் இரு அணிகளும் முதல்முறையாக இன்று மோத உள்ளன. பெயரளவில் அமெரிக்க அணி என இருந்தாலும் அதில் பெரும்பாலனவர்கள் இந்தியாவை சேர்ந்த வீரர்களாகவே உள்ளனர். அமெரிக்க அணியில் நெத்ரவால்கர் பவுலிங்கி கலக்கி வருகிறார். ஹர்மீத் சிங், மொனாங்க் படேல், ஆரோன் ஜோன்ஸ் போன்றோரும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி அணி ஸ்ட்ராங்கானதாக இருந்தாலும் ஓபனிங்கில் விராட் கோலி கடந்த 2 போட்டிகளிலுமே சொற்ப ரன்களில் அவுட்டாகி உள்ளார். ஆனால் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் அணிக்கு நம்பிக்கையை தருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்திய அணிக்கும், இந்திய வீரர்கள் நிறைந்த அமெரிக்க அணிக்குமான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்