இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்பு சில ஆண்டுகளாகவே அவர் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாடிய அவர் சில வாரங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வும் பெறுவதாக திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் தனக்கு ஐபிஎல் தொடரில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மேலும் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் வெளிநாட்டில் நடக்கும் லீக் தொடர்களில் விளையாடலாம் என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.