இனி கேப்டனா இருக்கதுல அர்த்தம் இல்ல.. நியூசிலாந்து கேப்டன் பதவியை துறந்த வில்லியம்சன்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick

புதன், 19 ஜூன் 2024 (10:10 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்து வந்த கேன் வில்லியம்சன் உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் பதவி விலகியுள்ளார்.



உலக அளவில் பிரபலமாக உள்ள கவனிக்கத்தக்க கிரிக்கெட் அணிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் ஒன்று. கடந்த 2019ல் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளில் பெரும் போராட்டத்திற்கு பின் இறுதி போட்டியில் நுழைந்து இங்கிலாந்து நிகராக விளையாடி 2 சூப்பர் ஓவர் வரை போய் ரசிகர்களின் பிபியை எகிற செய்த நியூசிலாந்தை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆனால் கடந்த சில காலமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தன் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று தோல்வியடைந்த நியூசிலாந்து, தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 8 போட்டிகளுக்கு கூட தகுதி பெறவில்லை.

இந்நிலையில் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். மேலும் 2024-25ம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் மத்திய ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன். வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவேம். நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியே வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்