தோல்வியே காணாத கொல்கத்தாவை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று CSK vs KKR அதிரடி ஆட்டம்!

Prasanth Karthick
திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:31 IST)
இன்று ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பை இந்த ஆட்டம் ஏற்படுத்தியுள்ளது.



இந்த சீசன் தொடங்கி 4 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலுமே வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சிஎஸ்கேவை பொறுத்தவரை சேப்பாக்கம் மைதானத்தில் அரிதாகவே தோல்விகளை சந்திக்கும் அணியாக உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்று முதல் 2 ஆட்டங்கள் வெற்றிநடை போட்டாலும் அடுத்தடுத்த தோல்விகள் அவரது கேப்பிடன்ஷிப் மீது கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆனால் அவர் மேலும் மேலும் பக்குவப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்பிடன்சியும் சரி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் போன்றவர்களின் அதிரடி ஆட்டமும் சரி அணிக்கு பெரிய பக்க பலம். கடந்த போட்டியில் 272 ரன்களை குவித்து ஆர்சிபியின் வரலாற்று சாதனையை 5 நாட்களுக்கு மீண்டும் முடியடித்த பேர் கொல்கத்தாவுக்கு உண்டு.

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திராவும், ருதுராஜும் கடந்த சில ஆட்டங்களாக சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டியில் நின்று பவர்ப்ளேவில் ஸ்கோர் செய்தால் அடுத்தடுத்து ரஹானே, தூபே உள்ளிட்டோரின் அதிரடியால் பெரும் இலக்குகளை வைக்க முடியலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்