ரிஷப் பண்ட் vs ஹர்திக் பாண்ட்யா… டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு யார் துணைக் கேப்டன்?

vinoth
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (07:44 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை அறிவிக்க வேண்டும். இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட ரிஷ பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு இடையில்தான் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரின் காயம் மற்றும் மோசமான ஃபார்மால் இப்போது அவருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாறாக ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்