ரிஷப் பண்ட் குறித்து நாங்கள் பாகிஸ்தானில் வருத்தமடைந்தோம்… ஆனால் இப்போது ? –வாசிம் அக்ரம் மகிழ்ச்சி!

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (08:11 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் கம்பேக் கொடுத்த பண்ட், தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் “பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வந்த அதிசய மனிதன் பண்ட். அவருக்கு விபத்து நடந்த போது பாகிஸ்தானில் நாங்கள் வருத்தமடைந்தோம். நானும் வருந்தினென். அதனால்தான் என் வருத்தத்தை ட்வீட்டாக பதிவிட்டேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் விதமே அலாதியானது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோரையெல்லாம் அவர் ரிவர்ஸ் ஸ்விப் சிக்ஸ் அடித்தது நம்ப முடியாதது.

ஒரு பயங்கரமான விபத்தில் இருந்து இப்படி மீண்டுள்ளார் என்றால் எவ்வளவு மனவலிமை அவருக்கு இருந்திருக்க வேண்டும்.  ஒரு மனிதனை உத்வேகப்படுத்த ரிஷப் பண்ட்டின் இந்த கதை உதவும். ஓ என்னவொரு அதிசயக் குழந்தை அவர்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்