ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட காத்திருக்கும் விராட் கோலி

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (22:09 IST)
இந்தியாவில் நடக்கவிருக்கும் பிரீமியர் பட்ஸல் லீக் கால்பந்து தொடருக்கு விளையாட்டை பிரபலபடுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கும் இசையில் விராட் கோலி பாட உள்ளார்.


 

 
இந்தியாவில் வருகிற ஜூலை 15 தேதி பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் தொடங்க உள்ளது. இதில் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் ஒன்று உருவாக உள்ளது.
 
அந்த பாடலில் பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராட் கோலியும் பாடலின் ஒரு பகுதியை பாடவுள்ளார்.
 
இது குறித்து விராட் கோலி கூறியதாவது:-
 
ரகுமான் பாடல்கள் இல்லாமல் இளம் வயது கடந்ததில்லை. அவரது இசையில் பாடுவது என்றவுடன் சற்றுப் பயமாகதான் இருந்தது. ஆடுகளங்களில் பயந்ததே இல்லை. ஆனால் ரகுமான் இசைக்கு பாடுவது அவ்வளவு பயத்தை ஏற்படுத்தியது. 
 
மேலும், கிரிக்கெட் போட்டிகளின் போது  தேசியக் கீதம் பாடப்படும். அதற்கு பிறகு ஆடும் போது இவரது வந்தே மாதரம் பாடல் தான் கேட்கும். அது தரும் எனர்ஜியை யாராலும் தர முடியாது, என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்