கோலிக்கு வைர பேட்டை பரிசளிக்க உள்ள தொழிலதிபர்… விலை இத்தனை லட்சமா?

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:13 IST)
இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தனது 19 வயதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வடிவக் கிரிக்கெட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரராக இருக்கிறார்.

இந்நிலையில் அவரின் இந்த சாதனைக்காக 1.04 கேரட் வைரம் பதித்த 10 லட்சம் மதிப்பிலான பேட் ஒன்றை சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வரும் உலகக் கோப்பை தொடரின் போது கோலிக்கு பரிசாக வழங்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்