டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கோலியை கேப்டனாக்க வேண்டும்… ரவி சாஸ்திரி சொல்லும் ஐடியா

சனி, 29 ஏப்ரல் 2023 (13:42 IST)
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியானது என்பதும் பேட் கம்மிங்ஸ் இந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பிசிசிஐ அந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களாக ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கட். ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “இந்த போட்டிக்கு ரோஹித் முழு உடல் தகுதியோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இல்லாத பட்சத்தில் விராட் கோலியைக் கேப்டனாக நியமிக்க வேண்டும். நான் கோச்சாக இருந்தால் அதைதான் பிசிசிஐக்கு பரிந்துரைப்பேன்” எனக் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்