7000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு.. ஆனால் உயிர்ப்பலி 44: இந்திய கொரோனா நிலவரம்..!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:19 IST)
இந்தியா அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது என்பதும் 26 பேர் கொரோனாவால் பலியாகினார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் 9753 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைய விட சுமார் 2000 பேர் குறைவாக இருந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயர்ந்தவரின் எண்ணிக்கை 44 என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று 26 பேர் உயிரிழந்த நிலையில் இன்று கூடுதலாக 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்