காங்கிரஸ் எம்பி மனைவிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு.. அசாம் முதல்வர் குற்றச்சாட்டு..!

Siva

ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (09:46 IST)
காங்கிரஸ் எம்பி மனைவிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பதாக அசாம் முதல்வர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அசாம் மாநில காங்கிரஸ் எம்பி கௌரவ்  மனைவி இலசபதி கோல்வார் எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு கொண்டு என பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்தது.
 
இந்த நிலையில் அசாம் முதல்வர் விஷ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியபோது எலிசபெத்துக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு உண்டு என்றும்,  எலிசபெத் தனது திருமணத்துக்குப் பின்னா்,  பாகிஸ்தான் சென்றது உறுதியான தகவல் என்றும், ஆனால் அவருடன் கெளரவ் கோகோயும் சென்றாரா என்பதை உறுதி செய்ய விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்,
 
மேலும் தருண் கோகோய் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில், முதல்வா் அலுவலகத்துக்குள் ஊடுருவி ரகசிய தகவல்களை தெரிந்துகொள்ள ஐஎஸ்ஐ முயற்சித்ததா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த விஸ்வ சா்மா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘ பாகிஸ்தான் அமைப்பில் அலி தெளகீா் ஷேக் என்பவரின் கீழ், கோல்பா்ன் பணியாற்றினார். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அமைப்பு என்ற போா்வையில், லீட் பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது’ என்று கூரியுள்ளார். அலி தெளகீா் இந்தியாவுக்கு எதிராக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை இணைத்திருந்த முதல்வர், தனது பதிவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்