இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் சமீப காலமாக சிறப்பாக உள்ளது. இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் துவம்சம் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கேப்டன் விராட் கோலியின் கீழ் சிறப்பாக விளையாடும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. மேலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி பலரால் புகழப்படுகிறார்.
இந்நிலையில் இந்திய கேப்டன் கோலி தன்னை பலர் பின்பற்றுவதால் தான் தவறான விஷயங்களில் ஈடுபடபோவதில்லை எனக்கூறி இனி வரும் காலங்களில் குளிர்பான விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேலும் தான் பயன்படுத்தாத எந்த பொருட்களின் விளம்பரங்களிலும் நடித்து அதனை மக்கள் மீது திணிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே தான் பயன்படுத்தாத எந்த பொருட்களின் விளம்பரங்களிலும் இனிமேல் நடிக்க போவதில்லை என கூறியுள்ளார்.
ஐபில் போட்டிகள் வரும் போது விளம்பரங்களில் நடிக்க வேண்டிய சூழல் வந்தாலும் நான் எனது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். இந்த முடிவே இறுதியானது என அவர் அறிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த திடீர் முடிவை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இது மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக அமையும் என கூறப்படுகிறது.