இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஐந்தாம் நாளில் இந்திய அணி தொடர்ந்து 3 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இதில் கோலி 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கோலி அவுட்சைடுக்கு வெளியே செல்லும் பந்தை ட்ரைவ் ஆட முயன்று, பந்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. கடந்த சில ஆண்டுகளாக கோலி இதே போல பலமுறை தனது விக்கெட்களை இழந்து வருகிறார்.
இது சம்மந்தமாக பல முன்னணி வீரர்கள் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.