கேப்டன் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கங்குலிக்கு இல்லை… முன்னாள் கேப்டன் கருத்து!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (15:33 IST)
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டது குறித்து முன்னாள் கேப்டன் வெங்சர்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்த சர்ச்சை குறித்து பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான வெங்சர்கார் ‘கேப்டனை நீக்குவது அல்லது புதிதாக நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது தேர்வுக்குழுதான். ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த அதிகார வரம்புக்குள் வரமாட்டார். கேப்டன் நீக்கம் குறித்து அவர் பேசுவது முறையில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்