அந்த வீரர்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்… நியுசிலாந்து பயிற்சியாளர் ஆருடம்!

vinoth

சனி, 8 மார்ச் 2025 (08:24 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.

ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடியதால் இந்த தொடருக்காக இந்திய அணி ஒரு கிலோ மீட்டர் கூட பயணம் செய்யவில்லை. அதே நேரம் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட 7048 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

நாளை இறுதிப் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து நியுசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் பேசியுள்ளார். அதில் “இறுதிப் போட்டியிலும் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவது வருண் தவான்தான். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகம் இல்லை.” எனக் கூறியுள்ளார். நியுசிலாந்துக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் வருண், 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்