எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

Mahendran

வெள்ளி, 7 மார்ச் 2025 (14:03 IST)
உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் இந்தியாவில் தனது டெஸ்லா கார் விற்பனையை தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல என பிரபல தொழிலதிபர் சஜ்ஜான் தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனர் சஜ்ஜான் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் இந்திய சந்தையில் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் கலாச்சாரத்தையும் தேவைப்பாடுகளையும் பற்றி அறிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
 
இந்தியாவில் மகேந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வலுவாக செயல்பட்டு வருகின்றன. அவர்களை விட எலான் மஸ்க் சிறப்பாக செயல்பட முடியும் என கணிக்க முடியாது. இது சாத்தியமற்ற விஷயமாகவே இருக்கலாம். 
 
அமெரிக்காவில் எலான் நினைத்ததைச் செய்ய முடியும். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ராக்கெட் கூட செலுத்த முடியும். ஆனால், இந்திய சந்தையில் வெற்றி பெறுவது அவருக்கு எளிதாக இருக்காது என தொழிலதிபர் சஜ்ஜான் தெரிவித்துள்ளார்.
 
இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருவதால், விவாதம் சூடுபிடித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்