இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

vinoth

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (09:56 IST)
ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளதால் இந்த முறை தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இந்த தொடருக்கான் இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த தாக்குதல்களால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பைத் தொடர் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் “ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவேக் கூடாது. இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றியே பெறும். ஆனால் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானோடு விளையாடவேக் கூடாது. விளையாட மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.  இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.” எனக் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கேதார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்