நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்கின்றது.
இந்நிலையில் இன்றைய போட்டி பற்றி பேசியுள்ள ஆஸி அணிக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் “துபாய் போன்ற மெதுவான ஆடுகளத்தில் கூட எங்கள் அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடியுள்ளார். அதனால் இன்றைய போட்டியிலும் அவர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய சுழலர்களை அடித்து ஆட சில திட்டங்கள் தீட்டியுள்ளோம். பெரிய போட்டிகளில் விளையாடும்போது நெருக்கடி இருக்கத்தான் செய்யும்” எனக் கூறியுள்ளார்.