மின்சாரம் இல்லாத மைதானத்தில் இன்றைய 4வது டி-20 போட்டி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (15:29 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
 
முதல் போட்டியில் இந்தியா வென்றது. 2 வது போட்டிலும் இந்தியா வென்ற நிலையில் 3 வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று 4 வது டி-20 கிரிக்கெட் போட்டி  ராய்ப்பூர் நாராயண  சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
 
ஆனால், மின்சாரம் இல்லாத மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.3.16 கோடி கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில் மைதான விளக்குகள் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்