ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சச்சின் தலைமையில் விளையாடி வருகிறது. இந்த அணியில் ஓய்வு பெற்ற வீரர்களான யுவ்ராஜ் சிங், அம்பாத்தி ராயுடு, பதான் பிரதர்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ட்வெய்ன் ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் சேர்த்தனர்.