ரத்தாகிறதா T20 World Cup? அதிரடி முடிவெடுத்த ஐசிசி!!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (12:38 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தள்ளிவைக்க ஐசிசி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து ரத்தாகி வருகின்றன. எனவே இது குறித்து காணொலி மூலம் ஐசிசி நிர்வாகிகள் குழு ஆலோசனை மேற்கொண்டது. 
 
இதன் முடிவாக 2023 ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதோடு, ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்