மீண்டும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்… கடைசி வாய்ப்பையும் வீணாக்கிய மிஸ்டர் 360!

சனி, 16 செப்டம்பர் 2023 (12:02 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் ப்ளேயிங் லெவனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பையும் அவர் வீணடித்துள்ளார். நேற்று அவர் இக்கட்டான நிலைமையில் 34 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதன் மூலம் அவர் உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு அளிக்கப்பட்ட கடைசி வாய்ப்பையும் வீணடித்துள்ளார் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்