இப்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 416 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹெண்ட்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 174 ரன்கள் சேர்த்தார்.
அவர் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 113 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் மிக அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை மற்றொரு ஆஸி வீரரான மைக் லெவியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மைக் லெவிஸ் 2006 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 10 ஓவர்களில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.